வாழ்த்துக்கள்


பண்பார் பெரியோர்க்கு வெண்பா மாலை
மரபின் மைந்தன் முத்தையா
    
எண்பதாம் ஆண்டினை எட்டும் பொழுதிதனில்
கண்ணெதிரே சுற்றங்கள் கூடுவதும்-பண்புடைப்
பிள்ளைகள் சேர்ந்து புகழ்விழா காண்பதும்
வெள்ளைமனம் கொண்டவரின் வாழ்வு.
வேலா யுதமென்னும் வெற்றித் திருமகனார்
சீலமுடன் வாழ்ந்த சிறப்புகளை - கோலமிகு
ஞானலட்சு மித்தாயின் நல்லியல்பை ஊர்மெச்ச
ஆனதிரு நாளின் அழகு.
வேரோடும் மண்மிசையே:வேண்டுமட்டும் போராடும்
சீராக பூமலரச் செய்திருக்கும்-நீரோடும்
கண்களுடன் பிள்ளைகள் கண்ணெதிரே பூத்தார்கள்
பண்புடைய பெற்றோரைப் பார்த்து
ஆயிரம்நி லாக்கண்ட அய்யாவும் அம்மாவும்
நேயமிகக் கண்டார் நிறைவாழ்வு-தூயதெய்வம்
பேரருளால் இன்னும்நீர் பல்லாண்டு வாழியவே
ஊரெல்லாம் போற்ற உவந்து
சதாசர்வ காலம்தம் சீர்பண்பு காத்தோர்
சதாபிஷேகம் காணும் சிறப்பில்-சதமடித்து
நூறாண்டும் கண்டு நலங்கள் மிகக்கொண்டு
பேறெல்லாம் காண்க பொலிந்து.
அன்னை அபிராமி அத்தன் அமுதீசன்
இன்னருளால் என்றும் இனிதாக-தன்மைமிகு
வேலா யுதனாரும் வியன்ஞான லட்சுமியுடன்
கோலமெலாம் காண்க கனிந்து
---------------------------------------------------------------------------------------------------------
சேது,
ப்ளாக் பார்த்தேன். நீங்களே நேரடியா வந்து சதாபிஷேக விழாவுக்கு கூப்பிட்டது போல இருந்தது. தாய் தந்தை மேல் இவ்வளவு பாசம் வைத்திருப்பது குறித்து மிக்க மகிழ்சி. அவர்களுக்கும் பெருமை, உங்களுக்கும் பெருமை. அவர்களின் வாழ்த்துக்கள் பெற மிக ஆசை. நேரடியாக வந்து உங்களை ஆச்சரியபடுத்தவும் ஆசை. பார்க்கலாம். தற்போது அவர்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு கிடைக்கட்டும்.
அன்புடன்,
சேதுராமன் சாத்தப்பன்
மும்பை
---------------------------------------------------------------------------------------------------------
அன்பு நண்பர் சேதுவுக்கு,

கற்பனைகளையும் பணத்தையும் கொட்டி பலா இலை முதல் பளிங்குக்கல் வரை வடிவமைக்கப்பட்ட எத்தனையோ அழைபிதழ்களை பார்த்திருக்கிறேன். அவை அத்தனையும் விட ஆகசிறந்த அழைபிதழ் இது. காரணம் - உங்கள் அழைபிதழில் நிறைந்திருப்பது அன்பு மட்டுமே. அதை எந்த வசதி வாய்ப்புகளும் உங்கள் பெற்றோருக்கு கொடுத்துவிட முடியாது.
உங்கள் பெற்றோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அவர்களின் ஆசிகளை எதிர்பார்க்கும்
நண்பன்,
சுவாமிநாதன்.
---------------------------------------------------------------------------------------------------------


எண்பது என்பது அரிது. பெற்றோர் இருவருமாய் செய்துகொள்ளுவது அதிலும் சிறப்பு. எங்கள் தந்தைக்கு நாங்கள் 10 ஆண்டுகள் முன்பு  திருக்கடையூரில் மிகவும் சிறப்பாக செய்தோம். அம்மா ஓர் ஆண்டில் அதனை தவறவிட்டார்கள்.
 அழைப்பிற்கு நன்றி. பெற்றோருக்கு என் அன்பினையும் மரியாதையினையும் அவசியம்  சொல்லுங்கள்.
 நன்றி
 சோம வள்ளியப்பன்
எழுத்தாளர்

---------------------------------------------------------------------------------------------------------
dear sethu,

all these days I know setu as a good friend.
now I understand sethu as a Noble & Wonderful person.
I feel your parents are allready blessed with a wonderful son SETHU.
please convey our vanakkam & we seek their blessings.

anbudan,
-chari